திருவாரூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கம்

திருவாரூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்களின் இயக்கத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-03 19:00 GMT
திருவாரூர்:-

திருவாரூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்களின் இயக்கத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

108 ஆம்புலன்ஸ்கள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு புதிதாக 2 ஆம்புலன்ஸ் வாகனங்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரால் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் களப்பால், திருத்துறைப்பூண்டி வட்டம் இடும்பாவனம் ஆகிய இரு பகுதிகளுக்கு 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் 2 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மாவட்டத்தில் இந்த 2 வாகனங்களையும் சேர்த்து மொத்தம் 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. 
இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.5 லட்சம்

அதனை தொடர்ந்து கூத்தாநல்லூர் பகுதியினை சேர்ந்த 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர் வள்ளி என்பவர் உயிரிழந்தமையால் அவருடைய வாரிசுதாரருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், மருத்துவம் ஊரகநல பணிகள் துணை இயக்குனர் (பொறுப்பு) உமா, கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்