கூலி உயர்வு பிரச்சினை முடிவுக்கு வந்ததால் விசைத்தறிகள் இயங்க தொடங்கின

கூலி உயர்வு பிரச்சினை முடிவுக்கு வந்ததால் விசைத்தறிகள் இயங்க தொடங்கின.

Update: 2022-03-03 17:03 GMT
கருமத்தம்பட்டி

கூலி உயர்வு பிரச்சினை முடிவுக்கு வந்ததால் விசைத்தறிகள் இயங்க தொடங்கின. 

வேலைநிறுத்தம்

அரசு அறிவித்த புதிய கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி முதல் கோவை-திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோவை-திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் கடையடைப்பு, கருப்புக் கொடி ஏந்துதல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. 

விசைத்தறிகள் இயங்கின

இந்த நிலையில்  கோவையில் நடந்த பேச்சுவார்த்தையில் கூலி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை முடித்துக்கொள்வதாக விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி  கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, சோமனூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் விசைத்தறிகள் இயங்க தொடங்கின. 

கடந்த 52 நாட்களாக விசைத்தறி கூடங்கள் இயக்காமல் இருந்ததால் அதில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்கள் உடனடியாக வராத காரணத்தாலும், பாவுநூல் பற்றாக்குறை காரணமாகவும்  50 சதவீத விசைத்தறிகள் மட்டுமே இயங்கின. 

52 நாட்கள்

இது குறித்து விசைத்தறி தொழிலார்கள் கூறும்போது, 52 நாட்களுக்கு பின்னர் விசைத்தறி இயங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிலார்கள் பலர் சொந்த ஊர் சென்றுவிட்டதாலும், பாவுநூல் பற்றாக்குறையாக இருப்பதாலும் இன்னும் ஒரு வாரத்துக்கு பின்னர்தான் அனைத்து விசைத்தறிகளும் செயல்பட தொடங்கும் என்றனர்.

மேலும் செய்திகள்