வாலிபரிடம் ரூ.9¼ லட்சம் மோசடி

இங்கிலாந்து நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி வாலிபரிடம் ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

Update: 2022-03-03 16:57 GMT
சிவகங்கை, 

இங்கிலாந்து நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி வாலிபரிடம் ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

ரூ.9¼ லட்சம் மோசடி

சிவகங்கை குமாரசாமி ராஜா தெருவைச் சேர்ந்தவர் வீரன் (வயது 29). இவர் லேப் டெக்னீசியன் படிப்பு படித்துள்ளார். வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக இவர் இணையதளத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்தார்.
 கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீரன் இங்கிலாந்தில் வேலை இருப்பதாக அறிந்தார்.இதைத்தொடர்ந்து அந்த வேலைக்கு செல்வதற்காக அவர் ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் வங்கி கணக்கு மூலம் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னர் அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை. அவரிடம் வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லையாம்.

போலீசில் புகார்

இதுகுறித்து வீரன் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சைபர் கி்ரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்