தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்
திண்டுக்கல்:
ஓடை ஆக்கிரமிப்பு
சாணார்பட்டி ஊராட்சி கோணப்பட்டி பகுதியில் உள்ள ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஓடையில் தண்ணீர் வரும் வழித்தடங்களில் சிலர் கற்கள், மண் மூலம் அடைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யனார், கோணப்பட்டி.
பயணிகள் நிழற்குடை தேவை
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் கோவிலூர் பிரிவில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.
சேதமடைந்த மின்கம்பம்
உத்தமபாளையம் அருகே ஆனமலையன்பட்டி 1-வது வார்டு நாடார் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
பள்ளம், மேடாக மாறிய சாலை
பழனி சேரன்ஜீவாநகரில் 1-வது தெருவில் சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், பழனி.