நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் நூற்றாண்டு விழா
நீடாமங்கலத்தில் போலீஸ் நிலையத்தில் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது.;
நீடாமங்கலம்:-
நீடாமங்கலத்தில் போலீஸ் நிலையம் ெதாடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி போலீஸ் நிலையத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் தலைமை தாங்கினார். நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சீதாலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) இமயவரம்பன், தாசில்தார் ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், கூடுதல் ஆணையர் அன்பழகன், நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகர வர்த்தகர் சங்க தலைவர் அசோகன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், ஊராட்சிமன்ற தலைவர் கைலாசம், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வரவேற்றார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.