நாணயங்கள் வைத்து பூஜை

நாணயங்கள் வைத்து பூஜை

Update: 2022-03-03 14:59 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பாகும். முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவதை பக்தர்கள் பெரும் பேராக கருதுகிறார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.
அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்த பழைய பொருளே பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் சமூகத்தில் ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகம். 
முந்தைய காலங்களில் மண் வைத்து பூஜை செய்யப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
உப்பு, தண்ணீர்
இந்த நிலையில் காங்கேயம் தாலுகா முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி உத்தரவான கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் ஆகிய பொருட்கள் நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் பிப்ரவரி27ந் தேதி முதல் திருநீறு, மஞ்சள், குங்குமம் ஆகிய பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்