குண்டடம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். சப் இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது குண்டடம் அடுத்துள்ள கருப்பட்டிபாளையத்தில் ஈஸ்வரன் 42, அவரது தோட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த கனகசாபாபதி 41, தங்கராஜ் 31, சாமிநாதன் 35, கோபால் 45, ஜெகநதான் 41, ஜெகதீஸ்வரன் 39 ஆகிய 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரொக்கம் ரூ.1200 யை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்