ரஷியா-உக்ரைன் போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராம் தலைமை தாங்கினார்.
இதில் மாநில செயலாளர் நடராஜன், மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்துள்ள போரை நிறுத்த வேண்டும். ரஷியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும்.
மேலும் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு இந்திய அரசு தனது செலவில் அழைத்து வரவேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.