வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற மதிப்பீட்டு ஆய்வு
வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற மதிப்பீட்டு ஆய்வு செய்தனர்.
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் அருகே கீழப்பட்டு கிராமத்தில் திருச்சி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், கிராமப்புற மதிப்பீட்டு ஆய்வு நடத்தினர். இதன் மூலம் கிராம மக்களிடம் அந்த கிராமத்தில் உள்ள வளங்கள், அங்குள்ள பிரச்சினைகள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து மாணவிகள் வரைபடங்கள் மூலம் விளக்கம் அளித்தனர். மேலும் கிராம மக்களின் உதவியுடன் சமூக வரைபடம், வள வரைபடம் உள்ளிட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.