பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-03 18:45 GMT
திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

11-ம் வகுப்பு மாணவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயி. இவருடைய மனைவி கஸ்தூரி. இவர்களுடைய மகள் சந்தியா (வயது16). இவர் பாமணியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். 
இந்த நிலையில் சந்தியா கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். 

வாலிபர் கைது

விசாரணையில் பாமணி சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலு மகன் யோகேஷ் (19) என்பவர் சந்தியாவை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். 

மேலும் செய்திகள்