2 மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் பலி

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதியில் அனல்மின்நிலைய ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்

Update: 2022-03-03 14:11 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதியில் அனல்மின்நிலைய ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். லாரி டிரைவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அனல்மின்நிலைய ஊழியர்
தூத்துக்குடி டூவிபுரம் 10-வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 22). அனல்மின்நிலைய ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவர் பீச் ரோடு சுற்றுச்சூழல் பூங்கா அருகே வந்த கொண்டு இருந்போது, அவருக்கு பின்னால் சரள் மண் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராத விதமாக செல்வக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வக்குமார் தூக்கி வீசப்பட்டார்.
சாவு
அதே நேரத்தில் வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் அந்தோணி ஸ்டீபன் (38) என்பவர், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு, பாத்திமாநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். எதிரே வந்த அவர் மீதும், லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த செல்வக்குமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் கார்த்திக் (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்