பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதலில் எலக்ட்ரீசியன் பலி

பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதலில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக செத்தார்.

Update: 2022-03-03 14:04 GMT
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பைவலசா நாகுப்பம் காலனியை சேர்ந்தவர் குமரேசன். (வயது 26). எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலை தனது கிராமத்தில் இருந்து பொன்னைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், எதிரே வந்த எரும்பி காலனியை சேர்ந்த வேலு (53) என்பவரது மோட்டார் சைக்கிள் பிள்ளையார் கோவில் அருகே வந்த போது, குமரேசனின் மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயமடைந்த குமரேசன் அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். படுகாயமடைந்த வேலு சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இந்த விபத்தில் பலியான குமரேசனுக்கு ரம்யா (22) என்ற மனைவி உள்ளார். இந்த விபத்து குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்