தனியார் தங்கும் விடுதியில் திடீர் தீ

தனியார் தங்கும் விடுதியில் திடீர் தீ

Update: 2022-03-03 13:52 GMT
ஊட்டி

ஊட்டி ரெயில் நிலையம் எதிரே தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியின் மேற்பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 3 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதற்கிடையே இன்றுகாலை 9 மணியளவில் திடீரென தங்கும் விடுதியின் மேற்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த உடமைகளுக்கும் பரவியதால் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. தீ விபத்தால் கம்பளிகள் உள்பட உடைமைகள் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் 2 சமையல் கியாஸ் சிலிண்டர்களை முன்கூட்டியே தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்