ஸ்ரீபெரும்புதூர் கோவில் குளத்தில் மூதாட்டி பிணம்

ஸ்ரீபெரும்புதூர் கோவில் குளத்தில் மூதாட்டி பிணமாக மிதப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.

Update: 2022-03-03 12:38 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மிகவும் பழமை வாய்ந்த ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யக்காரர் சாமி தேவஸ்தானம் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக மிதப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்