சென்னை ஐ.ஐ.டி.யில் தொழில் முனைவோர் மாநாடு

சென்னை ஐ.ஐ.டி. ஒவ்வொரு ஆண்டும் தொழில் முனைவோர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் 7-வது ‘தொழில் முனைவோர் மாநாடு 2022' இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது.;

Update:2022-03-03 15:02 IST
ஆன்லைனில் நடைபெறும் இந்த மாநாட்டில் 800-க்கும் மேற்பட்ட புதிய தொழில் முனைவோர்கள் உள்பட 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறுகையில், ‘இந்த மாநாடு ஏற்கனவே ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனத்தை அமைக்க ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதற்கான நிகழ்வாக இருக்கும். மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கும்' என்றார்.

மேலும் செய்திகள்