ஏ.டி.எம்.மில் கூடுதல் தொகை எடுத்துவிட்டு நாடகமாடிய வாலிபரை, இரும்பு கம்பியால் அடித்து கொல்ல முயற்சி

ஏ.டி.எம்.மில் கூடுதல் தொகை எடுத்துவிட்டு நாடகமாடிய வாலிபரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்ற அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-02 21:23 GMT
சிக்கமகளூரு: ஏ.டி.எம்.மில் கூடுதல் தொகை எடுத்துவிட்டு நாடகமாடிய வாலிபரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்ற அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

கூலி தொழிலாளி

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சுமந்த் (வயது 19). கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் அதேப்பகுதியை சோ்ந்த சுனில், ஹரீஸ். இந்த நிலையில் அனில் தனது ஏ.டி.எம். கார்டை சுமந்திடம் கொடுத்து ரூ.5 ஆயிரம் எடுத்து வரும்படி கூறியுள்ளார். ஆனால் ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற சுமந்த், ரூ.10 ஆயிரத்தை எடுத்தார். 

பின்னர் அவர், அனிலிடம் சென்று ரூ.5 ஆயிரத்தை மட்டும் கொடுத்துள்ளார். மேலும் ஏ.டி.எம்.மில் ரூ.5 ஆயிரம் மட்டும் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அனிலுக்கு ரூ.10 ஆயிரம் எடுத்ததாக செல்போனில் குறுந்தகவல் வந்தது. 

இரும்பு கம்பியால் தாக்குதல்

இதனால், சுமந்த் ஏ.டி.எம்.மில் கூடுதல் தொகையை எடுத்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அனிலும், ஹரீசும் சேர்ந்து சுமந்திடம் தகராறு செய்துள்ளனர். அப்போது சுமந்த், அவர்களை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த  அவர்கள் 2 பேரும் அங்கிருந்த இரும்பு கம்பிைய எடுத்து சுமந்த்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சுமந்த், ரத்த ெவள்ளத்தில் மயங்கி விழுந்தார். 

இதனால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் சுமந்தை மீட்டு சிகிச்சைக்காாக என்.ஆர்.புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

2 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து பாலேஒன்னூர் போலீசார் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம்.மில் கூடுதல் தொகையை எடுத்துவிட்டு நாடகமாடியதால் அனிலும், ஹரீசும் சேர்ந்து இரும்பு கம்பியால் சுமந்தை அடித்து கொல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலேஒன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனில் மற்றும் ஹரீசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்