மோட்டார் சைக்கிள்-கேரள அரசு பஸ் மோதல்; தந்தை-மகள் பலி
உடுப்பியில் மோட்டார் சைக்கிள்-கேரள அரசு பஸ் மோதிய விபத்தில் தந்தை-மகள் பலியானார்கள்.
மங்களூரு: உடுப்பியில் மோட்டார் சைக்கிள்-கேரள அரசு பஸ் மோதிய விபத்தில் தந்தை-மகள் பலியானார்கள்.
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார் சைக்கிள்-கேரள அரசு பஸ் மோதல்
உடுப்பி மாவட்டம் மஜாலு காரடி பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாய் (வயது 58). இவரது மகள் காயத்ரி (20). இவர் தார்வாரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி, தார்வாரில் இருந்து உடுப்பிக்கு பஸ்சில் வந்தார். உடுப்பி பஸ் நிலையத்துக்கு சென்று காயத்ரியை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் சந்தேகட்டே சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிேர கேரளாவில் இருந்து குந்தாப்புரா நோக்கி ெசன்ற கேரள அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
தந்தை-மகள் பலி
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்து கணேஷ் பாயும், அவரது மகள் காயத்ரியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணேஷ் பாய் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்தப்பகுதியில் இருந்தவர்கள் கணேஷ் பாயை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேஷ் பாய் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உடுப்பி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.