10 ஆயிரத்து 8 வாழைப்பழங்களால் அலங்காரம்

விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வாழைப்பழங்களால் அலங்காரம்

Update: 2022-03-02 20:57 GMT
கும்பகோணம்;
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வாழைப்பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைய வேண்டியும், கோடை வெப்பம் மற்றும் வறட்சியில் இருந்து மக்களை காக்க வேண்டியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்க வேண்டியும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, அனுமனுக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்