ெரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
விருதுநகர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தார்.
விருதுநகர்,
சாத்தூர்- துலுக்கப்பட்டி ெரயில் நிலையங்களுக்கு இடையே இ.முத்துலிங்காபுரம் கிராமத்தில் உள்ள ெரயில் பாதையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ெரயிலில் அடிபட்டு ெரயில் பாதையில் இறந்து நடந்தார். இதுபற்றி இ. முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி ெரயில்வே போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை. நீல நிற பேண்டும், சட்டையும், பிரவுன் கலர் கோட்டும் அணிந்துள்ளார். இதுபற்றி தூத்துக்குடி ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.