ஊருணியில் மூழ்கி சிறுவன் சாவு
கோவிலுக்கு வந்த இடத்தில் ஊருணியில் மூழ்கி சிறுவன் இறந்தான்.
விருதுநகர்,
மதுரை எல்லீஸ் நகர் ரோடு தாமஸ் காலனியில் வசிப்பவர் முத்து (வயது 47). பால் வியாபாரம் செய்யும் இவர் சிவராத்திரியை முன்னிட்டு தன் குடும்பத்தினருடன் விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில்உள்ள சீலைக்காரி அம்மன் கோவிலுக்கு வந்தார். நேற்று மதியம் அவரது மூத்த மகன் 7-ம் வகுப்பு படிக்கும் முத்து பெருமாள் (12) கோவில் அருகே உள்ள ஊருணியில் கை கால் கழுவ இறங்கிய போது எதிர்பாராதவிதமாக ஊருணியில் உள்ள தண்ணீரில் மூழ்கினான். சத்தம் கேட்டு முத்துவும் அவரது உறவினரும் ஓடிச் சென்று அவனை மீட்டு உடனடியாக செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவனை பரிசோதித்த டாக்டர், சிறுவன் முத்துப் பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தார். கோவிலுக்கு வந்த இடத்தில் மகனைப் பறிகொடுத்த முத்துவும், அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர். இதுபற்றி முத்து கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.