ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்பின்மேரி தலைமையில் போலீசார் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டபோது அதில் 210 மூடைகளில் 10 ஆயிரத்து 500 கிலோ(10½ டன்) ரேஷன் அரிசி இருந்தது. இதுதொடர்பாக நெல்லையை சேர்ந்த ஜெபசிங் (வயது 40) என்ற லாரி டிரைவரை கைது செய்தனர். ரேஷன் அரிசியை சிக்கலை சேர்ந்த செந்தில், கடத்தி சென்று கேரளாவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.