தீக்காயம் அடைந்த ஊழியர் சாவு

தீக்காயம் அடைந்த ஊழியர் சாவு;

Update: 2022-03-02 19:29 GMT
திருச்சி, மார்ச்.3-
திருச்சி கொட்டப்பட்டுவில் இயங்கிவரும் ஆவின் பால் நிறுவனத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு குளிரூட்டி பதப்படுத்தும் பாக்கெட்டுகள் அடைக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பால் குளிரூட்டும் பாய்லர் திடீரென பழுதாகி அதிக அழுத்தம் காரணமாக குழாய் வெடித்தது. இந்த விபத்தில் அங்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் ஈடுபட்ட ஊழியர் துறையூரை சேர்ந்த ரித்தீஷ் (வயது 31) தீக்காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஒப்பந்ததாரர் திருவண்ணாமலையைச் சேர்ந்த வீரமணி மீது கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரித்தீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிைடயே ரித்தீஷின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் உடலை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்