எரகுடியில் லாரி மோதி வாலிபர் பலி

எரகுடியில் லாரி மோதி வாலிபர் பலி;

Update: 2022-03-02 19:25 GMT
உப்பிலியபுரம், மார்ச்.3-
உப்பிலியபுரத்தை அடுத்த எரகுடி பள்ளர் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வடுகச்சி கிணறு வளைவு அருகே  சென்று கொண்டிருந்தார். அப்போது,அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியத. இதில் படுகாயம் அடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில். உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ்ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மண்ணச்சநல்லூரை அடுத்த அக்கரைப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (35) என்பவரை கைது செய்தார். விபத்தில் இறந்த பாலமுருகனுக்கு யசோதா என்ற மனைவியும்,, விமலேஷ் என்ற மகனும், சுதிஷ்காஎன்ற மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்