தலைவரை தாக்கிய ஊராட்சி செயலாளர் கைது

ஊராட்சி தலைவரை தாக்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-02 19:22 GMT
துவரங்குறிச்சி, மார்ச்.3-
ஊராட்சி தலைவரை தாக்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.
ஊராட்சி தலைவர்
துவரங்குறிச்சி அருகே உள்ள நல்லூர் ஊராட்சித் தலைவர் சின்னக்காளை. இவர் பில்லுப்பட்டியில் கோவில் திருவிழா நடத்துவது சம்பந்தமான கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் பிடாரப்பட்டி ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், அழகர்சாமி, சுப்பையா, தங்கராசு உள்ளிட்ட 4 பேருக்கும் சின்னக்காளைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஊராட்சித் தலைவரின் தலையில் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதில்படுகாயம் அடைந்த அவர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்குப்பதிவு
 இந்நிலையில் சின்னக்காளை அளித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இதே போல் சங்கன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சின்னக்காளை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்