பெயிண்டருக்கு கத்திக்குத்து
நெல்லையில் பெயிண்டருக்கு கத்திக்குத்து விழுந்தது.;
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் மணிகண்டன் (வயது 27), பெயிண்டர். இவர் தன்னுடைய தங்கை கணவர் ஆனந்த செல்வத்தை (25) பார்க்க கருங்குளத்துக்கு சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த செல்வம் திடீரென்று கத்தியால் மணிகண்டனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மணிகண்டன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனந்த செல்வத்தை தேடி வருகின்றனர்.