தகராறு செய்த 2 பேர் கைது
பட்டாசு வெடிப்பதில் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் படப்படி தெருவை சேர்ந்தவர் விஷ்ணு குமார் (வயது23). இவர் சம்பவதன்று பெரிய ரதவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கண்ணன் ஆகியோர் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இதை விஷ்ணுகுமார் கண்டித்த தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஷ்ணுகுமார் மீது கல்வீசியதாக தெரிகிறது. இது தொடர்பாக விஷ்ணுகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கப்பதிவு செய்து மணி கண்டன், கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.