மர்ம விலங்கு கடித்து 60 ஆடுகள் இறந்தன
வேட்டவலம் அருகே மர்ம விலங்கு கடித்து 60 ஆடுகள்ள செத்தன.;
வேட்டவலம்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60). இவர் மட்டப்பாறை பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆட்டு பட்டி அமைத்து 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஆட்டு பட்டியில் 7 குட்டிகள் உள்பட 60 செம்மறி ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து தங்கராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அறிந்ததும் வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் அல்லி, கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ்காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்தது தெரியவந்தது. மேலும் ஆவூர் கால்நடை மருத்துவர் கவிதா, இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார்.