திருக்கோவிலூர் அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் கைது

திருக்கோவிலூர் அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் கைது;

Update: 2022-03-02 17:13 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் வீரபாண்டி கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வீரபாண்டி கிராமத்தில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டை ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். 

இதையடுத்து மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழே நாச்சிபட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி(வயது 32) என்பதும் வீரபாண்டி கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை திருவண்ணாமலைக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அரகண்டநல்லூர் போலீசார் மினி லாரியுடன் கிருஷ்ணமூர்த்தியை விழுப்புரம் மாவட்ட உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து  கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார் மினி லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்