தினத்தந்தி புகார் பெட்டி
நாகை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
தெருவிளக்கு ஒளிருமா?
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சிவன் கீழவீதி தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள கருணை இல்லம் அருகில் உள்ள பகுதியில் தெருவிளக்கு சரிவர எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தெருமக்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிவன் கீழவீதி தெருவில் உள்ள தெருவிளக்கு ஒளிர உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
----
-சிவன் கீழவீதி தெருமக்கள், வேளாங்கண்ணி.