மாடுகளை திருடிய 2 பேர் கைது

சாணார்பட்டி அருகே மாடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-02 15:22 GMT
கோபால்பட்டி:

சாணார்பட்டி அருகே உள்ள கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 38). இவர், மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் அவரது தோட்டத்தில் கட்டியிருந்த 3 மாடுகள், ஒரு கன்றுக்குட்டியை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். 

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் மீனாட்சி புகார் செய்தார்.  அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், மீனாட்சியின் பக்கத்து தோட்டத்து உரிமையாளர் ஜெயராஜ் (37), இரண்டலப்பாறையை சேர்ந்த அம்புரோஸ் (21) ஆகியோர் சேர்ந்து மாடுகளை திருடி மினிவேனில் ஏற்றி சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 3 மாடுகள், ஒரு கன்றுக்குட்டி, மினி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்