திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு

குடவாசல் அத்திக்கடையில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-02 14:57 GMT
குடவாசல்:
குடவாசல் அத்திக்கடையில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார். 
கலெக்டர் ஆய்வு
குடவாசல் அத்திக்கடையில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது நெல் மூட்டைகள் பாதுகாப்பாக உள்ளதா? என அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கான நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இயங்கிவருகிறது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 58 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 73 ஆயிரத்து 632 விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ரூ.650 கோடியே 71 லட்சத்து 88 ஆயிரம்  கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 
22 சேமிப்பு கிடங்குகள்  
மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யப்பட்டு 22  சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கிடங்குகளில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் டன் நெல் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின்போது குடவாசல் தாசில்தார் உஷாராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை தாசில்தார் சரவணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
--

மேலும் செய்திகள்