சூதாடிய 8 பேர் கைது

சூதாடிய 8 பேர் கைது;

Update: 2022-03-02 13:25 GMT
காங்கேயம் அருகே நெய்க்காரன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காங்கேயம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது நெய்க்காரன்பாளையம் டாஸ்மாக் கடை இருக்கும் பகுதிக்கு அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சூதாடிய அப்பகுதியைச் சேர்ந்த தாமோதரன்  முருகேசன்  வையாபுரி  தங்கவேல் , கார்த்திக் குமார் , சுரேஷ் , காங்கேயம் திருப்பூர் சாலை பகுதியை சேர்ந்த நாகரத்தினம்  ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4,640 கைப்பற்றப்பட்டது.

மேலும் செய்திகள்