காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் படப்பை ஊராட்சியில் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை ஆ. மனோகரன் தலைமையில் நடைபெற்றது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சரஸ்வதி மனோகரன், படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன், துணைத் தலைவர் வினோத், ஒன்றிய துணை செயலாளர் செல்வி பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு படப்பை பஜார் பகுதியில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து ஏழை, எளிய மக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி மற்றும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா வேலு, ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வள்ளி சுந்தர் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாடம்பாக்கம் ஊராட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமி ராஜீ, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பிறந்த நாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், இருளர் இன மக்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் 100 பேருக்கு பிரியாணி வழங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளில் தி.மு.க. கொடியேற்றி இனிப்புகளை ஒன்றிய செயலாளர் படப்பை ஆ. மனோகரன் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி தி.மு.க.சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் விழா நேற்று பஜார் வீதியில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சி.எம்.கதிரவன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி துரை பாபு, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் பூங்கோதை ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் தா.மோ.அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மகளிரணி செயலாளர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி 1000 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கினார்கள் இதில் உறுப்பினர்கள் பாஸ்கர், குமரன், சரவணன், அலாவுதீன், அல்லாபகஷ், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.