அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 700 பேர் மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2022-03-02 11:49 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த டோல்கேட் பகுதியில் நேற்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்து ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு தொடர் பொய் வழக்குகளை போடுவதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்பாட்டம் போலீசார் அனுமதியின்றி நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, பெஞ்சமின், அப்துல் ரஹீம், மாதவரம் மூர்த்தி, முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் வேணுகோபால், திருத்தணி கோ.அரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பி.பலராமன், அலெக்சாண்டர், மணிமாறன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே. சுதாகர், பூண்டி ஒன்றிய செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்