இலவச மின் இணைப்பு மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதில் முதல்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கும் ஆணையை முதல்-அமைச்சர் வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில் முதல்கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் அயிரத்து 460 பேருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.