சாக்கடை வாய்க்காலை தூர்வார வேண்டும்

சாக்கடை வாய்க்காலை தூர்வார வேண்டும்

Update: 2022-03-02 11:32 GMT
சாக்கடை  வாய்க்காலை தூர்வார வேண்டும் 
 திருப்பூர் ஹார்வி சிட்கோவில் பிருந்தாவன் ஓட்டல் அருகில் கழிவு நீர் வாய்க்கால் அனைத்து பகுதியிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்  துர்நாற்றம் வீசுவதோடு  கழிவுநீர் தேங்கி சுகாதார சீ்ர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே கழிவுநீர் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். 
குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்
 காங்கேயம் ஒன்றியம் பொத்தியபாளையம் ஊராட்சி ஜெ.நகர் பகுதியில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு  குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் ெபாதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மாயராஜ்,இடையங்கிணறு

மேலும் செய்திகள்