ரூ1கோடிக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ1கோடிக்கு தேங்காய் பருப்பு ஏலம்

Update: 2022-03-02 11:28 GMT
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.  ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள்  தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி  நேற்று முன்தினம்  228 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 13ஆயிரத்து 294 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.93.65க்கும், குறைந்தபட்சம் ரூ.77.5க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 1லட்சத்து 92 ஆயிரத்து 164க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்