முன்னாள் அமைச்சர்கள் உள்பட 550 பேர் மீது வழக்கு பதிவு
முன்னாள் அமைச்சர்கள் உள்பட 550 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது;
மலைக்கோட்டை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு ஆகிய ஒன்றிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இ்ந்தநிலையில், முன்அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, பூனாட்சி, சிவபதி, அண்ணாவி, வளர்மதி, முன்னாள் எம்.பி. ப.குமார், ஆவின் தலைவர் கார்த்திகேயன் உள்பட 550 பேர் மீது கோட்டை போலீசார் 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.