வெடிகுண்டு தாக்குதலில் பலியான நவீனுடன் இருந்த கர்நாடக மாணவர் படுகாயம்
வெடிகுண்டு தாக்குதலில் நவீனுடன் சேர்ந்து என்ற கர்நாடக மாணவர் படுகாயம் அடைந்தார்.
பெங்களூரு: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. நேற்று நடந்த போரின்போது உக்ரைனில் தங்கி படித்து வந்த கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் வெடிகுண்டு தாக்குதலில் பலியானார்.
இந்த தாக்குதலில் நவீனின் நண்பர் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும், மற்றொருவர் காயமின்றி தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா செல்லகெரேவைச் சேர்ந்த 2 மாணவர்கள் உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தபோது நவீனுடன் இருந்துள்ளனர். அவர்களும் மருத்துவ மாணவர்கள்தான். அவர்களில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மற்றொருவர் காயமின்றி தப்பி இருக்கிறார்.
நவீனின் உடலை இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரதமர் மோடியியிடம் பேசியுள்ளேன். இந்திய அதிகாரிகளும் உகரைன் தூதரகத்துடன் தொடர்பில் உள்ளனர்’’ என்றார்.