புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோாிக்கை விவரம் வருமாறு;
ஆபத்தான பள்ளம் மூடப்பட்டது
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சாலையோரத்தில் பள்ளம் ஒன்று இருந்தது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து வந்தனர். அதுமட்டுமின்றி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களும் அவ்வவ்போது விபத்தில் சிக்கிக்கொண்டனர். இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் இருந்த ஆபத்தான பள்ளத்தை மூடி உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
-பொதுமக்கள், பேராவூரணி.