செருவாவிடுதி ஓடாக்குளத்தை தூர்வார வேண்டும்
செருவாவிடுதி ஓடாக்குளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்;
செருவாவிடுதி ஓடாக்குளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓடாக்குளம்
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் ஓடாக்குளம் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 15 ஏக்கர் ஆகும். புதுப்பட்டினம் 2-ம் நம்பர் கிளை வாய்க்காலில் வரும் தண்ணீர் இந்த குளத்தில் நிரம்புவது வழக்கம். இந்த குளத்தைச் சுற்றியுள்ள வயல்கள் இதன் மூலம் பாசன வசதி பெற்று வந்தன.
தூர்வார நடவடிக்கை
தற்போது இந்த குளம் முழுவதும் கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது. மேலும் பாசன வாய்க்கால்கள் முழுவதும் தூர்ந்த நிலையில் காணப்படுகிறது. குளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. எனவே செருவாவிடுதி தெற்கு ஓடாக்குளத்தை முழுமையாக தூர்வாரி, அதன் கரைகளை உயர்த்தி குளத்தின் மூலம் பாசன வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு செருவாவிடுதி தெற்கு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.