சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர்:
வழக்கு
அரியலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த முருகானந்தத்தின் மகன் சீனிவாசன்(வயது 23). இவர் கடந்த 2018-ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தினார். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
7 ஆண்டு சிறை
அவர் தனது தீர்ப்பில் சீனிவாசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சீனிவாசனை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.