கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி வாலிபர் சாவு
கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
கிணற்றில் தவறி விழுந்தார்
பெரம்பலூர் சங்குப்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் வசந்தகுமார்(வயது 22). இவர் பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வெங்கடேசபுரத்தில் உள்ள பர்கர் கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் வசந்தகுமார், பெரம்பலூரில் உள்ள விளாமுத்தூர் சாலையில் ரெங்கநாதன் என்பவரது வயலில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். அங்கு துணிகள் துவைக்க வந்த மாரி என்பவர், இதனை பார்த்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவலை தெரிவித்து, உதவிக்கு அழைத்தார்.
சாவு
இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு வந்து மீட்பு உபகரணங்களை கொண்டு கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், நீரில் மூழ்கி இறந்த வசந்தகுமாரின் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.