குப்பைகள் கொட்டிய தகராறில் பெண்கள் மீது தாக்குதல்

குப்பைகள் கொட்டிய தகராறில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2022-03-01 20:49 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் காந்திமதி (வயது 38). அதே ஊரில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் கலையரசி(35). சம்பவத்தன்று கலையரசியின் வீட்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் தனது வீட்டின் குப்பைகளை காந்திமதி கொட்டியதாகவும், அதற்கு கலையரசி இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காந்திமதிக்கும், கலையரசிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து அங்கு வந்த கலையரசியின் உறவினர்கள் கணபதி, கலியமூர்த்தி, வேம்பு, சக்திவேல் ஆகியோர் சேர்ந்து காந்திமதியை தாக்கியதாகவும், பின்னர் காந்திமதியின் உறவினர்களான முருகேசன், செல்வமணி ஆகியோர் சேர்ந்து கலையரசியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காந்திமதி மற்றும் கலையரசி ஆகியோர் விக்கிரமங்கலம் போலீசில் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் காந்திமதி, முருகேசன், செல்வமணி மற்றும் கலையரசி, கணபதி, கலியமூர்த்தி, வேம்பு சக்திவேல் ஆகிய 8 பேர் மீது விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்