கோவிலில் மணிகள், குத்துவிளக்குகளை திருடியவர் கைது
கோவிலில் மணிகள், குத்துவிளக்குகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் மருதையான் கோவில் உள்ளது. இதில் கோவிலில் இருந்த 4 வெண்கல மணிகள் மற்றும் 2 பித்தளை குத்துவிளக்குகள் ஆகியவற்றை ஒருவர் திருடியுள்ளார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை பிடித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திரா காலனியை சேர்ந்த பெரியசாமி(வயது 56) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.