சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-01 20:49 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஒக்கநத்தம் பிலிச்சுக்குழி கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விக்னேஸ்வரன்(வயது 26). கூலித்தொழிலாளி. இவர் ஒரு வீட்டின் கீற்றை பிரித்து உள்ளே புகுந்து, அங்கு தூங்கிக்கொண்டிருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அருகில் தூங்கிய சிறுமியின் தாய் எழுந்து, அவரை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஸ்வரன் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்