தூக்குப்போட்டு பெண் தற்கொலை
அருப்புக்கோட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் தெற்குப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி பிரியா (வயது 27). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.