362 பதவிகளில் வெற்றி பெற்றவர்கள் கவுன்சிலர்களாக இன்று பதவியேற்பு
மாவட்டம் முழுவதும் 362 பதவிகளில் வெற்றி பெற்றவர்கள் கவுன்சிலர்களாக இன்று பதவியேற்கின்றனர்.
விருதுநகர்,
மாவட்டம் முழுவதும் 362 பதவிகளில் வெற்றி பெற்றவர்கள் கவுன்சிலர்களாக இன்று பதவியேற்கின்றனர்.
362 உறுப்பினர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. சிவகாசி மாநகராட்சி மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய நகராட்சிகள், செட்டியார்பட்டி, சேத்தூர், காரியாபட்டி, மம்சாபுரம், மல்லாங்கிணறு, சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு ஆகிய 9 பேரூராட்சிகள் உள்ளன.
சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டு உறுப்பினர்களும், ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டு உறுப்பினர்களும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 33 வார்டு உறுப்பினர்களும், அருப்புக்கோட்டையில் 36 வார்டு உறுப்பினர்களும், சாத்தூரில் 24 உறுப்பினர்களும், விருதுநகர் நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர்களும் ஆக மொத்தம் 5 நகராட்சிகளிலும் 171 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
பதவியேற்பு
இதேபோன்று பேரூராட்சிகளில் செட்டியார்பட்டி பேரூராட்சியில் 15 உறுப்பினர்களும், சேத்தூரில் 18 பேரும், காரியாபட்டியில் 15 பேரும், மம்சாபுரத்தில் 18 பேரும், மல்லாங்கிணரில் 15 பேரும், சுந்தரபாண்டியத்தில் 15 பேரும், எஸ்.கொடிக்குளத்தில் 15 பேரும், வ.புதுப்பட்டியில் 15 பேரும், வத்திராயிருப்பில் 17 பேரும் ஆக மொத்தம் 9 பேரூராட்சிகளிலும் 143 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
மொத்தம் 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் 362 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநில தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி இன்று (புதன்கிழமை) அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்கின்றனர்.
மறைமுக தேர்தல்
இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி மாநகராட்சி மேயர்,
துணைமேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.