நாடுகளின் பெயர்களை கூறி அசத்தும் சிறுவன்
கொடிகள், ரூபாய் நோட்டுகளை பார்த்து நாடுகளின் பெயர்களை கூறி சிறுவன் அசத்துகிறான்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய காமேஷ். இவரது மனைவி சுமதி. இவர்களின் மகன் கணேஷ் தேவ் (வயது2). நாட்டுக்கொடி, ரூபாய் நோட்டு ஆகியவற்றை காட்டினால் அது எந்த நாட்டுடையது என்பதை எளிதில் கூறும் ஆற்றல் பெற்றவன். அத்துடன் பொன்மொழிகள் மற்றும் திருக்குறளையும் அழகாக கூறி அனைவரையும் அசத்தி வருகிறான். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்திலும் இவர் இடம் பெற்றுள்ளார். இ்ந்த சிறுவனை மாணிக்கம் தாகூர் எம்.பி. பாராட்டினார்.