மது விற்ற 2 பேர் கைது

நெல்லையில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-01 19:23 GMT
நெல்லை:

நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் நெல்லை பேட்டை நரசிங்கநல்லூர் ரெயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மது விற்று கொண்டிருந்த மானூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவரை கைது செய்தனர். 

இதேபோல் எம்.ஜி.ஆர். நகர் ரெயில்வே கேட் பகுதியில் மது விற்று கொண்டிருந்ததாக பேட்டை ரகுமான் பேட்டை பகுதியை சேர்ந்த குலாம் மைதீன் (54) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்